புரட்சியாளர் சே குவேராவைக் கைது செய்த பொலிவியாவின் முன்னாள் ராணுவ அதிகாரி கேரி பிராடோ சால்மன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
1967 இல் தென்மேற்கு பொலிவியாவில் ராணுவ நடவடிக்கையின் போது காயமடைந்த சே குவேராவைக் கைது செய்யும் பொறுப்பில் சால்மன் இருந்தார்.
இந்த நடவடிக்கையால் அவர் அமெரிக்காவின் பாராட்டைப் பெற்றார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சே குவேரா பிடிபட்ட மறுநாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து ராணுவ ஆட்சியில் இருந்த பொலிவிய நாடாளுமன்றம் சால்மனை தேசிய வீரராக அறிவித்தது.