இறுதிக் கட்ட பரபரப்பில் ஒன்ராறியோ தேர்தல்!

0
476
Ontario Election Final Stage

 

ஒன்ராறியோ மாநில தேர்தலை ஒட்டி இறுதிநேர தீவிர பரப்புரைகளில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். Ontario Election Final Stage

நாளை 7ஆம் திகதி வியாழக்கிழமை வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சித் தலைவர் டக் ஃபோர்ட் ரொரன்ரொவில் தனது அறிவிப்பினை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து ரொரன்ரோவின் மூன்று பரப்புரை அலுவலகங்களுக்குச் செல்லவுள்ளதுடன், ஹொர்ன்ஹில்ல் வணிக வளாகத்திற்கும் பரப்புரைக்காக செல்கின்றார்.

அதேபோல ரொரன்ரொ பெரும்பாகம் உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பகுதிகளில் புதிய சனநாயக கட்சித் தலைவர் ஆன்ட்ரியா ஹோர்வத், பிரம்ப்டன், குஹெல்ப், கிட்செனர், கேம்பிரிட்ஜ், பிரண்ட்போர்ட், டன்டஸ், பேர்லிங்டன் மற்றும் டொரண்டோ பகுதிகளுக்குச் சென்று அங்கு தீவிர பரப்புரைகளில் ஈடுபட்டார்.

லிபரல் கட்சித் தலைவர் கத்தலின் வின் மூன்று நேர்காணல்களில் கலந்து கொள்கின்றார், டொரண்டோவில் தனது அறிவிப்பினை வெளியிடுகின்றார்.

அதனைத் தொடர்ந்து லண்டன் மற்றும் கிட்சென்னர் பகுதிகளில் தனது ஆதரவாளர்களையும் அவர் சந்திக்கின்றார்.

இந்த தேர்தலில் தமது தோல்வி உறுதியானது என்று அவர் அண்மையில் தெரிவித்துள்ள போதிலும், தனது பரப்புரை நடவடிக்கைகளின் வேகத்தினை கைவிடாது தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது