மைத்திரி-ரணில் பனிப்போரின் உச்சம்..! : பாராளுமன்றில் எதிரொலித்த TNL விவகாரம்

0
483
ranil maithree fight TNL issue

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் குடும்பத்துக்குச் சொந்தமான TNL தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, ஜனாதிபதி மைத்திரிபால கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று மூடியுள்ளனர்.(ranil maithree fight TNL issue)

2017ஆம் ஆண்டுக்குப் பின்னர், உரிமக் கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறியே பொல்கஹவெலவில் உள்ள TNL தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மூடியதாக கூறப்படுகிறது.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அண்மைய பனிப்போரின் உச்சக்கட்டமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் நேற்று   நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

ஊடக சுதந்திரம் பற்றிக் கேள்வி எழுப்பிய கூட்டு எதிரணிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, TNL தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையம் மூடப்பட்டதன் பின்னால் பாரிய, பிரச்சினை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் முன்வைத்த கருத்துக்களை விமர்சிக்கும் வகையில் TNL தொலைக்காட்சி செய்திகளை ஒளிபரப்பி வந்தமையே, அதன் பொல்கஹவெல பரிமாற்ற மையம் மூடப்படுவதற்குக் காரணம் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த ஊடக மற்றும் நிதி அமைச்சராக மங்கள சமரவீர, இந்த விவகாரம் பற்றி தனக்கு தெரியாது என்று குறிப்பிட்டதுடன்,  ஊடக சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய மங்கள சமரவீர, இது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமல்ல என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த விவகாரம் கூட்டு அரசாங்கத்துக்குள் தீவிரமடைந்துள்ள மோதல்களை வெளிப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

Tags:ranil maithree fight TNL issue,ranil maithree fight TNL issue,ranil maithree fight TNL issue,