போராடி தோற்றது டெல்லி! : சென்னை அணிக்கு மீண்டும் வெற்றி!

0
505
chennai super kings vs delhi daredevils 30th match news Tamil

(chennai super kings vs delhi daredevils 30th match news Tamil)

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் வொட்சன் மற்றும் டோனியின் அபார ஆட்டத்தினால் சென்னை அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை சென்னை அணிக்கு வழங்கியது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய சென்னை அணிக்கு வொட்சன் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். இவர் 40 பந்துகளில் 78 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் ராயுடு 41 ஓட்டங்களையும், டோனி ஆட்டமிழக்காமல் 22 பந்துகளுக்கு 51 ஓட்டங்களையும் விளாசி அணியின் ஓட்ட இலக்கை 211 ஆக உயர்த்தினார்.

இந்நிலையில் 212 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி வெற்றியிலக்கை நோக்கி அதிரடியாக ஆடிய போதும், 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

டெல்லி அணிசார்பில் அதிரடியாக ஆடிய ரிஷாப் பாண்ட் 45 பந்துகளில் 79 ஓட்டங்களையும், விஜய் சங்கர் 31 பந்துகளுக்கு 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

சென்னை அணிசார்பில் அஷிப் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதனடிப்படையில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்தையும், டெல்லி அணி 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது.

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here