
ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட நாட்டின் பெரும்பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்களும், அதனுடைய கூட்டணி படையினரும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.Yemen 26 civilians killed Saudi attacks
இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு ஏமன் அதிபர் மன்சூர் ஹாதி வெளிநாடு தப்பி சென்றுவிட்டார்.
ஏமனில் மீண்டும் மன்சூர் ஹாதி அரசை அமைக்கும் நோக்கில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சன்னி இஸ்லாமியர்கள் கூட்டணி மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் கடந்த 3 ஆண்டுகளாக ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வருகிறது.
இந்நிலையில், ஏமனின் முக்கிய பகுதியான ஹூடேய்டாவில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்கள் சந்தையில் சவுதி கூட்டணி படைகள் நேற்று தாக்குதலில் ஈடுபட்டன.
இதில், பொதுமக்கள் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த 50 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏமனில் போரினால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்து வரும் 80 லட்சம் மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்கள் எடுத்துச்செல்லும் முக்கிய வழித்தடமாக ஹூடேய்டா துறைமுகம் விளங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
tags :- Yemen 26 civilians killed Saudi attacks
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே !
- சவுதியில் இருந்து பரவும் மெர்ஸ் வைரஸ்!
- அபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு
- சவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை!