மே.தீவுகள் – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடி வரும் மே.தீவுகள் அணி, முதல் நாள் ஆட்டநிறைவில் 6 விக்கட்டுகுளை இழந்து 246 ஓட்டங்களை பெற்றுள்ளது.
மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி போர்ட் ஒப் ஸ்பெயினில் நடைபெற்று வருகின்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மே.தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர், முதலில் துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தார்.
இதன்படி துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி ஆரம்பத்திலேயே தடுமாற்றத்துக்கு ஆளானது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பிராத்வைட் 3 ஓட்டங்களுடன் லக்மாலின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, டெவோன் ஸ்மித் 7 ஓட்டங்களை பெற்றிருந்த போது துரதிஷ்டவசமாக ரன் அவுட் மூலம் பெவிலியன் திரும்பினார்.
பின்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கீரன் பவெல் 38 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் லஹிரு குமாரவின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஹோப் 44 ஓட்டங்களுடனும், ஜேசன் ஹோல்டர் 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, டொவ்ரிச் முதல் நாள் ஆட்டநிறைவில், ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இலங்கை அணியின் பந்து வீச்சை பொருத்தவரையில் லஹிரு குமார 3 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், ரங்கன ஹேரத் மற்றும் லக்மால் தலா ஒவ்வொரு விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
- துரதிஷ்ட வசமாக வெளியேறுகிறார் செரீனா வில்லியம்ஸ்!
- துடுப்பாட்ட வரிசைக்கு பலம் சேர்த்திருக்கும் குசல் பெரேரா! : நிறைவுக்கு வந்தது பயிற்சிப்போட்டி!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
West Indies vs Sri Lanka 1st Test news Tamil, West Indies vs Sri Lanka 1st Test news Tamil