மே.தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டு விளையாடி வருகின்றது.
மே.தீவுகள் அணி, முதல் நாள் ஆட்டநிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 246 ஓட்டங்களை பெற்ற நிலையில், நேற்று களமிறங்கியது.
ஆறு விக்கட்டுகளை இழந்து தடுமாறிய மே.தீவுகள் அணியின் தனியொருவராக களத்தில் நின்ற டொவ்ரிச் ஓட்டங்களை குவித்தார்.
டொவ்ரிச் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 125 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, மே.தீவுகள் அணி 8 விக்கட்டுகளை இழந்து 414 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்தியது.
மே.தீவுகள் சார்பில் பிஷு மற்றும் ஹோல்டர் தலா 40 ஓட்டங்கள், ஹோப் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் சார்பில் லஹிரு குமார 4 விக்கட்டுகளையும், லக்மால் 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
தங்களது முதல் இன்னிங்ஸ் ஆடிய இலங்கை அணியின் ஆரம்பமே மிக மோசமாக அமைந்துள்ளது. இலங்கை அணி இதுவரையில் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்துள்ளது.
குசல் ஜனித், மெத்தியூஸ் மற்றும் மெண்டிஸ் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, களத்தில் சந்திமால் 3 ஓட்டங்களுடனும், ரொஷேன் சில்வா ஒரு ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடுகின்றனர்.
மே.தீவுகளின் சார்பில் ஹோல்டர், கேப்ரியல் மற்றும் ரோச் தலா ஒவ்வொரு விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
- துரதிஷ்ட வசமாக வெளியேறுகிறார் செரீனா வில்லியம்ஸ்!
- துடுப்பாட்ட வரிசைக்கு பலம் சேர்த்திருக்கும் குசல் பெரேரா! : நிறைவுக்கு வந்தது பயிற்சிப்போட்டி!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
West Indies vs Sri Lanka 1st Test day 2 news Tamil, West Indies vs Sri Lanka 1st Test day 2 news Tamil