TTC Lawsuit
ரொரண்டோ போக்குவரத்து ஆணைக்குழுவானது (TTC), ஸ்கார்போரோவைச் சேர்ந்த சட்ட நிறுவனமொன்றின் மீது மோசடி வழக்கொன்றினை தொடுத்துள்ளது.
தனிப்பட்ட காயங்கள் தொடர்பான சட்ட நிறுவனமொன்றின் மீதே இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
TTC சுமார் 1.5 மில்லியன் டொலர்களை நட்ட ஈடாக கோரியுள்ளது.
குறித்த சட்ட நிறுவனம் பஸ்கள் மற்றும் வீதிக்கார்களால் ஏற்பட்ட விபத்துக்குளில் பாதிக்கப்பட்டோரின் நலக் கோரிக்கைகளில் மாற்றங்களை மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆவணங்களை போலியாக மாற்றி பாதிக்கப்பட்டோருக்கு கொடுக்கப்படாத தொகையை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிறுவனத்தின் 13 வாடிக்கையாளர்களின் நட்ட ஈட்டு கோரிக்கை மோசடி தொடர்பான தகவல்கள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக TTC தெரிவிக்கின்றது. 2014- 2015 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்கள் தொடர்பான ஆவணங்களே கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த வழக்குகளுக்காக சுமார் 6 இலட்சத்துக்கு 54 ஆயிரத்து 553 டொலர்களை, TTC வழங்கியுள்ளது. இதில் எவ்வளவு மோசடி செய்யப்பட்டது என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது.
எனினும் குறித்த குற்றச்சாட்டை சட்ட நிறுவனம் மறுத்துள்ளது.