(Today horoscope 26-05-2018 )
இன்று!
விளம்பி வருடம், வைகாசி மாதம் 12ம் தேதி, ரம்ஜான் 10ம் தேதி,
26.5.18 சனிக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி இரவு 7:16 வரை;
அதன் பின் திரயோதசி திதி, சித்திரை நட்சத்திரம் இரவு 10:03 மணி வரை;
அதன் பின் சுவாதி நட்சத்திரம், மரண, அமிர்த யோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
பொது : சனீஸ்வரர் வழிபாடு.
மேஷ ராசி நேயர்களே !
எதிர்கால நலன் குறித்து திட்டமிடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைத் திறம்பட சமாளிப்பர். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும். உடல்நலனில் அக்கறை தேவை.
ரிஷப ராசி நேயர்களே !
குடும்ப விஷயத்தை பிறரிடம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுவர். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். நண்பர்களால் உதவி உண்டு.
மிதுனம் ராசி நேயர்களே !
குடும்பத்தினரின் அதிருப்திக்கு ஆளாகலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களால் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.
கடக ராசி நேயர்களே !
மனதில் உற்சாகமும், செயலில் நேர்மையும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் மறைமுகப்போட்டி விலகும். லாபம் திருப்தியளிக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற் றம் கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.
சிம்ம ராசி நேயர்களே !
மனதில் புத்துணர்ச்சி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் வியத்தகு அளவில் முன் னேற்றம் பெறும். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் நட்புணர்வுடன் பழகுவர். ஆரோக்கியம் பலம் பெறும். பிள்ளைகளின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்.
கன்னி ராசி நேயர்களே !
உறவினருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிலுவைப் பணமும் வசூலாகும். பணியாளர்கள் சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.
துலாம் ராசி நேயர்களே !
பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியர் செல்வர். பெண்களுக்கு பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
விருச்சிகம் ராசி நேயர்களே !
இடையூறாக செயல்பட்டவர் இடம் மாறிச் செல்வர். தொழில் வியாபாரத்தில் வங்கி நிதியுதவியுடன் விரிவுபடுத்துவீர்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கும். அரசு வகையில் நன்மை பெறுவீர்கள்.
தனுசு ராசி நேயர்களே !
மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். வீடு, வாகனப் பாதுகாப்பில் கவனம் தேவை.
மகர ராசி நேயர்களே !
பேச்சு, செயலில் கலகலப்பு மிகுந்திருக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் ஆதா யம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசு வகையில் நன்மை உண்டாகும்.
கும்பம் ராசி நேயர்களே !
எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். புத்திரரின் அன்பைப் பெற்று நிம்மதி காண்பீர்கள்.
மீனம் ராசி நேயர்களே !
நண்பரின் எதிர்பார்ப்பு அறிந்து நிறைவேற்றவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். கடனாக கொடுத்த பணம் கிடை க்கும். விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.
மேலும் பல சோதிட தகவல்கள்
- சனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா ??
- ஒரே ராசியில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்
- வளர்பிறை மற்றும் தேய்பிறை உண்டாவதற்கான காரணம்; புராணக்கதை
- பூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…?
- வீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது
- இராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது ??
- காரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……
- செவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..
- உள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா ? அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்
- வருமானத்தை அள்ளித்தரும் செவ்வாய்கிழமை
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com