Mystery persons fire government bus tiruchendur
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடியில் இருந்து நெல்லை நோக்கி அரசுப்பேருந்து ஒன்று, சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில், செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் ராம்பிரகாஷ் உட்பட 40 பயணிகள் இருந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அடுத்த கருங்குளம் என்ற இடத்தில் சென்றபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேர், திடீரென பேருந்தை வழிமறித்தனர். பின்னர், மூன்று பேரும் பேருந்தில் ஏறினர்.
மேலும், பேருந்தின் படிக்கட்டுகளில் இரண்டு பேர் நின்றுகொள்ள, பெட்ரோல் கேனுடன் உள்ளே சென்ற ஒருவர், திடீரென பெட்ரோலை ஊற்றி, பேருந்துக்கு தீ வைத்தார். இதில் பயணம் செய்த வயதான தம்பதியர் உட்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.
More Tamil News
- சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் – காடுவெட்டி குரு!
- பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு!
- அஞ்சல்துறை ஊழியர்கள் மொட்டை அடித்து போராட்டம்!
- தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இலவச சட்ட உதவி மையம்!
- கல்விமுறையை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி செலவிடப்படும் – பிரதமர் மோடி!