முல்லைத்தீவில் நரபலி கொடுக்கப்பட்ட சிறுவன் – அச்சத்தில் உறைந்துள்ள பிரதேச மக்கள்

0
527
tamil news suspicion boy given nervousness forest area mullaitiv

(tamil news suspicion boy given nervousness forest area mullaitiv)

தென்னியன்குளம் காட்டுப் பகுதியில் சிறுவன் ஒருவன் நரபலி கொடுக்கப்பட்டானா என்ற சந்தேகம் பிரதேச மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தென்னியன்குளத்தினை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் புதையல் தோண்டப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த பகுதியில் சிறுவன் ஒருவனின் பாதணியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 8 அடி ஆழமான குழியொன்று வெட்டப்பட்டு, சேவல் ஒன்று பலி கொடுக்கப்பட்டமைக்கான அடையாளங்களும், பூஜைகள் இடம்பெற்றமைக்கான தடையங்களையும் மல்லாவி பொலிஸார் நேற்றைய தினம் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே குறித்த இடத்தில் சிறுவனின் பாதணி கண்டெடுக்கப்பட்டுள்ளமை புதையல் தோண்டுவதற்காக சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கிராம மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனால் பிரதேச மக்களிடையே பரபரப்பும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மல்லாவி பொலிஸார் தெரிவிக்கையில். கிராம மக்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் அங்கு சென்று சோதனைகளை மேற்கொண்டோம்.

அந்த பகுதியிலிருந்து ஒருசோடி பாதணியை மீட்டோம். எனினும் பகுதியில் சிறுவர்கள் யாரும் காணாமல் போனதாக எமக்கு எந்தவித முறைப்பாடும் கிடைக்கவில்லை.

அத்துடன் குறித்த பகுதியில் சட்டவிரோத மரக் கடத்திலில் ஈடுபடும் நபர்கள் இந்த பாதணிகளை விட்டு சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

(tamil news suspicion boy given nervousness forest area mullaitiv)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites