இலங்கையில் ஊடக சுதந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி ஏனைய மனிதர்களது ஆடைகளைக் களைய முயற்சிக்கும் ஊடக நிறுவனங்கள் தமக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் எனும் உடை கழற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நாட்டில் வழங்கப்பட்ட சுதந்திரத்தை அனுபவிப்பதில் சில ஊடக நிறுவனங்கள் மனித நேயத்தை மீறிச் செயற்பட்டு வருகின்றன.
இலங்கையில் ஊடக சுதந்திரம் முழு அளவில் வழங்கப்பட்டுள்ளது.
இதனை வைத்துக் கொண்டு ஜனாதிபதியை தகாத வார்த்தைகளைக் கொண்டு புனைந்து எழுதுகின்றனர்.
சில இணைத்தளங்களில் பொய்யான குற்றச்சாட்டுக்களை வைத்து ஜனாதிபதியின் ஆடைகளைக் கழற்றிக் காட்டுவதற்கு முயற்சிக்கின்றனர்.
சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி வருபவர்களுக்கு தான் எச்சரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தவறான செயற்பாடுகளினால் வழங்கப்பட்ட சுதந்திரத்தின் ஆடையைக் கழற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொலன்னறுவையில் இரண்டாவது நாளாகவும் நடைபெற்ற எழுச்சி பெறும் பொலன்னறுவை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
(Media organizations trying abort media freedom Sri Lanka maithree)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com