மருத்துவ சபை தலைவரின் பதவி விலகல் ஒரு அரசியல் நாடகம் – ஹரித அலுத்கே

0
402
Chairman SriLanka Medical Council professor Colvin Gunaratne resigned

இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் கொல்வின் குணரத்தனவின் பதவி விலகலுக்கும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும் இடையில் மறைமுக தொடர்பு இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.

பேராசிரியர் கொல்வின் குணரத்ன ஏற்கனவே அமைச்சரின் பிரதிநிதியாகவே இலங்கை மருத்துவ சபையில் அங்கத்துவம் வகித்தார் என அந்தச் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

கொல்வின் குணரத்ன மருத்துவ சபையின் தலைவராக இருந்து கொண்டு இந்த மருத்துவ சபையின் அபிவிருத்திக்காக என்ன நடவடிக்கையை மேற்கொண்டார்.

அவர் சொல்லும் மருத்துவ சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் அதனைக் காரணம் காட்டி இராஜினாமா செய்வது எந்தவகையில் நியாயமாகும் எனவும் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

(Chairman SriLanka Medical Council professor Colvin Gunaratne resigned)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites