இலங்கை மாணவர்களுக்கு ஹிந்தி மொழியை கற்க இந்தியாவின் உதவி

0
388
tamil news india support scholarship hindi study sri lankan studnts

(tamil news india support scholarship hindi study sri lankan studnts)

18 இலங்கை மாணவர்களுக்கு ஹிந்தி மொழியை கற்பதற்கான புலமைப்பரிசில்களை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளதாக, இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த 18 மாணவர்களுக்கான பயணச் செலவு, கல்விக் கட்டணம் மற்றும் ஒரு வருடத்திற்கான உணவுச் செலவு என்பன இந்த புலமைபரிசிலின் ஊடாக வழங்கப்படுகிறது.

ஆக்ராவில் அமைந்துள்ள கேந்திரியா ஹிந்தி சன்ஸ்தான் கல்வி நிறுவனத்திலேயே தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தமது ஹிந்தி மொழிக்கான கல்வியை தொடரவுள்ளனர்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் எச்.ஈ.தரஞ்சித் சிங் சந்து, குறித்த மாணவர்கள் இந்தியாவிற்கு புறப்படுவதற்கு முன்னர் அவர்களை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

கண்டி, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பின் சில பகுதிகளில் இருந்து மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(tamil news india support scholarship hindi study sri lankan studnts)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites