(tamil news bad private bus drivers reason lots accident)
அண்மைக் காலமாக போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது பொது மக்கள் தமது உயிரை பற்றி சிந்திக்க வேண்டிய ஒரு நிலை உருவாகியுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சமீப காலத்தில் அதிகளவில் பேருந்து விபத்துக்கள் இடம்பெற்றதாகவும், அமைச்சின்
புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தனியார் பேருந்துகளை விட, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் இடம்பெற்ற விபத்துக்கள் குறைவு எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதுளையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் நேற்று (30) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
மேலும், 22 ஆயிரம் தனியார் பேருந்துகளும் 5400 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளும் தற்போது நாட்டில் இயங்குகின்றன.
இந்த நிலையில் எதிர்காலத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மிகப் பெரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தனியார் பேருந்து சாரதிகளின் அசமந்த போக்கு, போட்டி மனப்பான்மை, பயணிகளை ஏற்றி வசூலை சுவீகரிப்பதில் உள்ள பேராசை, மற்றும் வீதிப் போக்குவரத்து விதிகளை மதிக்காமை போன்ற காரணிகளால் அதிகளவில் விபத்துக்கள் நேர்வதுடன், பலவுயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன.
இதனால் பேருந்தை செலுத்தும் சாரதிகளை விட அதன் உரிமையாளர்களே பெரும் நட்டத்தை எதிர்நோக்குகின்றனர்.
அரச பேருந்துகள் சரியான நேரத்தில் இயங்கி பாதுகாப்பாக பயண முடிவை அடைவதுடன், தனியார் பேருந்துகள் அதிகம் இருப்பதால் முறையான நேர சூசியில் இயங்காமல் மந்தைகளை போன்று பெரும் வீதிகளில் பயணிப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் தனியார் பேருந்துகளை பொதுமக்கள் புறக்கணிக்கும் சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் வீதி ஒழுங்குகளை மதிக்காத பேருந்து சாரதிகளை கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.
(tamil news bad private bus drivers reason lots accident)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடமராட்சியில் மீனவரின் படகை தீ வைத்த விஷமிகள்
- மத்தல விமான நிலையத்தினால் மாதாந்தம் 2500 இலட்சம் ரூபா செலவு
- வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாத பேராசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி; இரண்டாம் தவணை நிறைவு
- கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாகவிருந்த பெட்டிக்கடை அகற்றல்
- பாலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு