(sunrisers hyderabad team player wore black armbands)
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் இரண்டு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், சென்னை அணி 2 விக்கட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய ஹைதராபாத் அணியின் வீரர்கள் கறுப்பு நிற பட்டி ஒன்றினை தங்களது கைகளில் அணிந்து விளையாடியிருந்தனர்.
இதற்கான காரணம் என்னவென்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது இதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்திருந்தனர்.
குறித்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே வீரர்கள் கறுப்பு பட்டியை அணிந்து விளையாடியுள்ளனர்.
ஹைதராபாத் அணியில் ரஷீட் கான் மற்றும் மொஹமட் நபி ஆகிய இரண்டு ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடுகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!! : மாலிங்கவுக்கு மீண்டும் ஏமாற்றம்!!!
- இத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்!
- ஆப்கானிஸ்தானுடன் மோதும் பங்களாதேஷ்! : அணி விபரம் வெளியானது…
- உண்மையில் இதுதான் அற்புதமான பிடியெடுப்பு!!! : ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த வில்லியர்ஸ்! (காணொளி)
- இத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை நோக்கி நகரும் நடால்!
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- கனடாவில் விளையாடவுள்ள ஸ்டீவ் ஸ்மித்… : சற்றுமுன்னர் கிடைத்த தகவல்…
- மென்செஸ்டர் சிட்டி பயிற்றுவிப்பாளரின் ஒப்பந்தக்காலம் நீடிப்பு!
- அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம் இதோ!
<<Tamil News Group websites>>