Seine-et-Marne பகுதியிலுள்ள 6 ஆரம்ப பாடசாலைகள் மாணவர்களுக்கான பள்ளி சீருடையை அறிமுகப்படுத்த ஒரு வாக்கெடுப்பு நடத்தினர். கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பெற்றோர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். Seine-et-Marne schools introduce school children uniform
இவ் வாக்கெடுப்பு கடந்த சனிக்கிழமை, ஜூன் 2 ம் தேதி நடந்தது. 62 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் இப்பரிந்துரைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் சில பெற்றோர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அதாவது Toussaint விடுமுறைக்கு பிறகு Provins நகரத்திலுள்ள பள்ளி குழந்தைகள் புதிய சீருடையை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் polo shirt, sweatshirt மற்றும் “sweater” அணிய வேண்டும். பள்ளி சிறுமிகள் விரும்பினால் பாவாடை அணியலாம்.
மேலும், பள்ளி சீருடை அணிவதன் மூலம் மாணவர்களிடையே சமத்துவம் மற்றும் ஒழுக்கத்தை பேண முடியும் என நம்பப்படுவதாக கூறப்படுகிறது. அத்துடன், இந்த நடவடிக்கை மற்ற ஆரம்ப பள்ளிகளிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
**Most Related Tamil News**
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- IS இல் அங்கம் வகித்தால் ஆயுள் தண்டனை!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- அவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!