வேதனம் அதிகரிக்கப்பட மாட்டாது

0
411
president maithripala sirisena announce no increment salary ministers

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வேதன அதிகரிப்புக்கு இடமளிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். president maithripala sirisena announce no increment salary ministers

பொலன்னறுவையில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களது வேதனம் அதிகரிக்கப்படுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதற்கமைய 54 ஆயிரத்து 285 ரூபாவாக நிலவிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வேதனம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாவாகவும் 63 ஆயிரத்து 500 ரூபாவாக நிலவிய பிரதியமைச்சர் ஒருவரின் வேதனம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

65 ஆயிரம் ரூபாவாக நிலவிய ராஜாங்க அமைச்சர் ஒருவரின் வேதனம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களது வேதனத்தை அதிகரிக்க கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்ததாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும் அவ்வாறான எந்தவொரு தீர்மானத்திற்கும் தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று வருடக் காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி என்ற வகையில் தனது வேதனத்தை அதிகரிப்பதற்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை தான் உறுதியாக நிராகரித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சித்து வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதன அதிகரிப்பு பொருத்தமானது அல்லவெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
president maithripala sirisena announce no increment salary ministers

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites