முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் குழப்பம் இல்லை – மாவை உறுதி!

0
439
North Chief Minister Candidate No Confusion Mavai Senathirajah Said

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம், முடிவடைவதற்கு இன்னும் சில காலமே இருக்கிறது. North Chief Minister Candidate No Confusion Mavai Senathirajah Said Tamil News

இந்நிலையில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்னும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் குழப்பம் நிலவி வருகின்றது.

இது தொடர்பில் , வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யாரைக் களமிறக்குவது என்று, உரிய நேரத்தில், முடிவெடுக்கப்படும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

மாகாண சபை தேர்தல் எப்போது நடக்கும் என்பது தொடர்பாக இன்னும் உறுதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான சூழலில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக, பலரும் பலவிதமான கருத்துக்களை கூறிவருகிறார்கள்.

கூட்டமைப்பின் கட்சிகளுக்குள் இருந்தும் அத்தகைய கருத்துக்கள் வெளிவருகின்றன.

வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படும்போது முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் உரிய நேரத்தில், உரியவாறு ஒன்றுகூடி முடிவுகளை எடுப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளால் எந்தக் குழப்பங்களும் வரமாட்டாது. எமது மக்களுக்கு செய்ய வேண்டியதை உரிய முறையில் செய்வோம் என மாவை சேனாதிராசா தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites