ஆட்கடத்தலுக்கு எதிராக இலங்கையுடன் இணைய அமெரிக்கா விருப்பம்!

0
416
America Wish Join Sri Lanka Kidnapping Prevention Actions

ஆட்களைக் கடத்துதலுக்கு எதிரான உலக நாளை முன்னிட்டு, அனைத்துலக தொழிலாளர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு கொழும்பில் நேற்று இடம்பெற்றது. America Wish Join Sri Lanka Kidnapping Prevention Actions Tamil News

இந்நிகழ்வில் அமெரிக்க பதில் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ரொபேர்ட் ஹில்டன்,

ஆட்களைக் கடத்தும் நடவடிக்கைக்கு எதிராக, சிறிலங்கா அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் அனைத்துலக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற, அர்ப்பணிப்புடன் தயாராக இருக்குறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சுமார் 2.5 மில்லியன் டொலர் வரையான மூன்று கொடைகளுக்கு நிதி அளித்துள்ளது.

இந்தக் கொடைகளை, ஆட்களைக் கடத்துபவர்களுக்கு எதிரான நீதித்துறை விசாரணை, மற்றும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உதவும் செயற்பாடுகளுக்கும், ஆட்கடத்தல் தொடர்பான காத்திரமான தரவுகளை சேகரித்து, அறிக்கையிடுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகள் மற்றும் பாதுகாப்புக்கும் பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites