New Plan permanent citizenship foreigners Qatar Tamil news
வெளிநாட்டுக்காரர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க கட்டார் அரசு முன்வந்துள்ளது.
இதுதொடர்பான வரைவு சட்டத்துக்கு நாடாளு மன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது.வளைகுடா நாடுகள் கூட்டமைப்பில் இருந்து கட்டார் கடந்த ஜூன் மாதம் ஒதுக்கிவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பல்வேறு சீர்திருத்தங்களை ஆட்சி, நிர்வாகம், தொழில் ஆகியவற்றில் கொண்டுவருகிறது கட்டார் அரசு. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டுக்காரர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க முன்வந்துள்ளது.
கட்டாரை சேர்ந்த பெண்கள் வெளிநாடுகளில் திருமணம் செய்து குழந்தை பெற்றாலும் அவர்களை கட்டார் குடிமக்களாக கருதவும் புதிய சட்டம் அனுமதிக்கிறது.
நிரந்தர குடியுரிமை பெறுவோருக்கு இலவச கல்வி, சுகாதாரவசதி வழங்கப்படும்.நிரந்தரக்குடியுரிமை பெற்றோர் கட்டாரில் நிலம், தொழில்நிறுவனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் வாங்கவும் இந்த புதிய சட்டம் அனுமதிக்கிறது.
இச்சட்டம் தற்போதைய அரசர் ஷேக்தமீம் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்
New Plan permanent citizenship foreigners Qatar Tamil news
மேலும் முக்கிய மத்திய கிழக்கு செய்திகள்