(Need close Beef container protest Chavakachcheri)
யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சாவகச்சேரி நகரில் மாட்டிறைச்சி கொள்கலனை மூடுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
‘பசுவதையை ஒழிப்போம்’ என்ற கோஷத்துடன் சிவசேனா அமைப்பின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரப்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன், தென்மராட்சி பிரதேச செயலகத்துக்குச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலகத்தில் மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.
இதேவேளை, சாவகச்சேரி மாட்டு இறைச்சி கொள்கலன் ஒருமாத காலத்திற்குள் மூடப்பட வேண்டும் என்றும் இல்லையேல் தென்மராட்சி பிரதேச செயலகத்தை முற்றுகையிடுவோம் என்றும் சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன் பிரதேச செயலரிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சாவகச்சேரி நகர சபைக்குச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், நகரசபை உப தவிசாளரிடம் மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.
கடந்த வாரம் சாவகச்சேரி நகரசபைக்கு சொந்தமான மாட்டிறைச்சிக் கடையில் இருந்து சுமார் 25 மாடுகள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கொழும்பிற்கு அனுப்பப்படவிருந்தது.
இதன்போது, ஏனைய கட்சி உறுப்பினர்களால் சட்டவிரோதமாக மாடுகளை வெட்டியவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டனர்.
இதனையடுத்தே, இன்றைய தினம் சாவகச்சேரி பகுதியில் மாட்டிறைச்சி கொள்கலனை மூடுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
More Tamil News
- இலங்கைக்கு ஆபத்தாக மாறியது சீனா : அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு உரிமை கோருகிறது சீனா
- இலங்கை தமிழன் பிரித்தானியாவில் வெட்டி கொலை
- ஒரே நாளில் ஆறு விபத்துக்கள், அதிவேக வீதியில் அவதானமாக பயணிக்கவும்
- தற்போதைய அரசியல்வாதிகள் அரசியலை புனித பணியாகச் செய்து வருகின்றனர் – அமைச்சர் ரிஷாட்
- நீர்த்தேக்கங்களின் அவசர கதவுகள் திறப்பு – 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்
- யாழில். ஆணின் சடலம் மீட்டு; கொலையா? தற்கொலையா?
- கண்டி கம்பளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு
- இதுவரை 13 பேர் பலி; தென் மாகாண மக்கள் அச்சத்தில்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; Need close Beef container protest Chavakachcheri