Narendra Modi met US Defense Secretary James Mattees
அரசுமுறை சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸை சந்தித்து பேசியுள்ளார்.
அரசு முறை பயணமாக இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோடி, தற்போது சிங்கப்பூரில் உள்ளார். சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, இன்று சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் கோ சோக் டாங் உடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, மகாத்மா காந்தியின் நினைவிடங்களுக்கு கோ சோக் டாங் உடன் சென்று மரியாதை செலுத்தினார்.
பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்கா – இந்தியா இடையேயான உறவு குறித்து விவாதிக்கப்பட்ட தாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Narendra Modi met US Defense Secretary James Mattees
More Tamil News
- தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழு தூத்துக்குடி செல்கிறது!
- ப.சிதம்பரம் இன்று சிபிஐ முன் ஆஜர் – முன்ஜாமீன் கிடைக்குமா?
- ராகுல்காந்தியின் ஆசீர்வாதத்தால்தான் முதல்வர் ஆனேன் – கர்நாடக முதல்வர் குமாரசாமி!
- ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – சரத்குமார் பேட்டி!
- ரஜினி வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
- யார் சமூகவிரோதிகள்? – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்!
- ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தடையா?
- கச்சநத்தம் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை!
- சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை!
Tamil News Group websites :