வட மாகாண பெண் அமைச்சர் அனந்தி கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மினால் சபையில் வைத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. MP Sumanthiran Supports North province Member Ayub Asmin
இந்த விடயத்தை மறுத்த அமைச்சர் அனந்தி பொய் புரளியை அவிழ்த்துவிட்ட அஸ்மின் மீது பொலிஸில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.
இவரின் முறைப்பாட்டுக்கு அமைய அஸ்மினை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு சாவகச்சேரி பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் வினவப்பட்ட போது, மாகாணசபையில் பேசப்படும் விடயங்களை விமர்சிக்க மற்றும் விசாரிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என கூறியுள்ளார்.
சாவகச்சேரியில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன் மூலம் பொய் கூறிய வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மினை சுமந்திரன் காப்பாற்ற முயல்வதாக பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அனந்தி மீது வதந்தி பரப்பிய அஸ்மினின் கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் சுமந்திரனின் கருத்தால் பலரும் விசனமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு