கிளிநொச்சி ஜெயந்திநகரில் கற்பமான நிலையில் இருந்த பசு ஒன்றை இனம்தெரியாத நபர்கள் இரவோடு இரவாக திருடிச்சென்று இறைச்சியாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kilinochchi Jayanthinagar Ex Militant Cow Killed
ஜெயந்திநகரில் வசித்து வரும் மூன்று மாவீரர்களின் சகோதரியும், காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியின் மனைவியும் முன்னாள் போராளியுமான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசுவே இவ்வாறு கொடூரமாக இறைச்சிக்காக கொலை செய்யப்பட்டுள்ளது.
மிகவும் வறுமை கோட்டிற்குள் வாழ்ந்து வரும் இவருக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று இப் பசுவை வாழ்வாதார உதவியாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த கொடூர செயலை செய்தவர்களை கண்டு பிடித்து தக்க தண்டனை வழங்கவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு பிரதேசத்தில் இவ்வாறு பசுக்கள் திருடப்பட்டு இறைச்சிக்காக கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு