ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை அளித்துள்ளனர். Mahinda Rajapaksa Family
இதன்போது கடைசித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் செலவு விபரங்கள் அடங்கிய ஆவணங்களையும் குறித்த குழு தனது முறைப்பாட்டுடன் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2015 ஆம் ஆண்டு பத்திரிக்கையொன்றில் வெளிவந்த கட்டுரையொன்றில் அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் செலவு விபரங்கள் தொடர்பான ஆவணங்கள் கிடைத்ததாக குறிப்பிடப்படிருந்ததாகவும், அத்தொகை 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாகவும், ஐ.தே.க. உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்மையில் நிவ்யோர்க் டைம்ஸ் சஞ்சிகையின் ஊடாகவும் 100 மில்லியன் ரூபா தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த ஆவணங்களை வழங்கவே குறித்த ஆணைக்குழுவுக்கு வந்ததாக ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நிவ்யோர்க் டைம்ஸ், விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க மஹிந்த ராஜபக்ஷவோ, நாமலோ அல்லது சமலோ வரவில்லை என ஐ.தே.க. துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
தமது பக்க நியாயத்தை விளக்கமளிக்க அவர்கள் வரவில்லை என்பதுடன் நாட்டின் உச்சபட்ச கௌரவத்துக்குரிய இடமான பாராளுமன்றில் உரையாற்றும் வாய்ப்பை மஹிந்த தவறவிட்டுள்ளதாக துஷார குறிப்பிட்டுள்ளார்.