(Leaflets clarify public officers connection Kilinochchi public market)
கிளிநொச்சி பொதுச் சந்தை தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு புதிதாக அமைக்கப்படவுள்ள மூன்று மாடிக்களை கொண்ட புதிய சந்தைக் கட்டடம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கு தெளிப்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பட்டுள்ளன.
இன்று (07) கிளிநொச்சி பொதுச் சந்தையின் வர்த்தகர்கள், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகம் உள்ளிட்ட திணைக்களங்களுக்கு முன்னால் நின்ற வர்த்தகர்கள் அலுவலகத்திற்கு வரும் உத்தியோகத்தர்களிடம் தங்களின் நிலைமைகளை எடுத்துக் கூறும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.
குறித்த துண்டுப் பிரசுரத்தை விநியோகித்த வர்த்தகர்கள் கருத்து தெரிவித்த போது பல்வேறு சந்தர்ப்பங்களில் பல காரணங்களால் மிகவும் பாதிப்புக்குள்ளான வர்ததகர்களாகிய எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக தோல்வியடைந்த திட்டத்தை எங்கள் மீது திணிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் பல மாவட்டங்களில் சந்தை மாடிக் கட்டடங்கள் தோல்வி அடைந்த நிலையில் கிளிநொச்சியில் எங்கள் மீது அந்த திட்டத்தை திணிக்கின்றார்கள்.
எனவே, வர்த்தகர்களின் நலனுக்கு புறம்பான இச் செயற்பாடுகளை தெளிவுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதாக குறிப்பிட்டனர்.
(Leaflets clarify public officers connection Kilinochchi public market)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி பலி
- மாணவனின் கையடக்கத் தொலைபேசியில் 300 ஆபாசக் காட்சிகள்; மயங்கி விழுந்த தாய்
- நண்பனின் காதலனை இரவு முழுவதும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நம்பிக்கை துரோகி
- வெளியாளர்களுக்கு காசுக்காக காணி பகிர்ந்தளிப்பு; தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
- ஈஸி கேஷ் (ez cash) முறையில் ஹெரொயின் போதைப்பொருள் விற்பனை
- உணவு ஒவ்வாமை; நால்வரும் பலி – வாதுவையில் சம்பவம்
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- சீதுவை கத்தோலிக்க தேவாலயத்தில் திருட்டு; பொலிஸில் முறைப்பாடு
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!