யாழில் அராலி, மூளாய் போன்ற பகுதிகளில் மக்கள் எவரும் குள்ள மனிதர்களைக் காணவில்லை. ஆனால் ஊடகங்கள் மட்டும் அவ்வாறு கூறுகின்றனர். எனவே அது வெறும் கட்டுக்கதையாக இருக்கும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். Jaffna Araly Mysteries Human Issue Tamil News
நேற்று நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஆவா குழுவில் தலைவர் வருடத்துக்கு 3 தடவைகள் பிறந்த நாள் கொண்டாடுகின்றார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து 25 படகுகளை வாடகைக்கு எடுத்து 200க்கும் அதிக மதுபானப் போத்தல்களுடன் வாள் வடிவிலான கேக்கை வெட்டியுள்ளார்.
அது தொடர்பான ஒளிப்படங்களும் வெளியாகியுள்ளன. ஆனால் பொலிஸார் அது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? என அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
அதேவேளை, வலி.மேற்கில் ஏற்பட்டுள்ள குள்ளமனிதர் தொடர்பான பிரச்சினையை ஆராய பொதுமக்களுக்கும், பொலிஸாருக்குமு் இடையே அராலி அம்மன் ஆலயத்தில் நாளை பிற்பகல் 3 மணிக்கு கலந்துரையாடல் ஒன்றை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்; 66 மனித எச்சங்கள் மீட்பு
- மிருசுவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் தப்பித்துச் சென்ற கார் மீட்பு
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!