ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணித் தலைவர் அஜின்கே ரஹானே முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது.
தங்களது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஆப்கானிஸ்தான் அணி, நம்பர் ஒன் டெஸ்ட் அணியை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என்பது அனைவராலும் உற்றுநோக்கப்படுகின்றது.
இன்றைய போட்டியில் களமிறங்கும் இந்திய அணியில் மூன்று ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் களமிறக்கப்படவுள்ளனர். தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளதுடன், கே.எல்.ராஹுல் நான்கவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார்.
அத்துடன் புதிதாக அழைக்கப்பட்டிருந்த நவ்தீப் சைனி மற்றும் தாகூர், குல்தீப் யாதவ், கருண் நாயர் ஆகியோர் இன்றைய போட்டியில் இணைக்கப்படவில்லை.
இன்று விளையாடும் அணிகளின் விபரம்
இந்தியா
சிக்கர் தவான், முரளி விஜய், சிட்டேஸ்வர் புஜரா, அஜின்கே ரஹானே, கே.எல்.ராஹுல், தினுஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இசான் சர்மா, உமேஷ் யாதவ்
ஆப்கானிஸ்தான்
மொஹமட் சேஷாட், ஜவாட் அஹமடி, ரெஹமட் சஹா, அஸ்கர் ஷ்டெனிஸ்காய், அஷ்பர் சேஷாய், மொஹமட் நபி, ஹஸ்மத்துல்லா சஹிடி, ரஷீட் கான், முஜிப் உர் ரஹ்மான், யமின் அஹமட்ஷாய், வஃபடர்
- மே.தீவுகளிடம் சரணடையுமா இலங்கை? : தொடர்கிறது போராட்டம்!!!
- மே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி!!!
- 11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்!!!
- மே.தீவுகளுக்கெதிரான அடுத்த போட்டியில் களமிறங்கும் முன்னணி வீரர்!!!
- சென்னை அணியில் அதிரடியை வெளிப்படுத்தியற்கான காரணம் என்ன? : கூறுகிறார் டோனி
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
india vs afghanistan Maiden Test match news Tamil, india vs afghanistan Maiden Test match news Tamil