இடி, மின்னலுடன் கடுமையான மழை வியாழன் அன்று (நேற்று) இரவு மட்டும் பிரான்ஸின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை தாக்கியது. இதனால் பாரிய வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.Heavy rain, thunderstorm hit France
பல வருடங்களின் பின்னர், குறிப்பாக நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் கடுமையான இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டது.
அல்சேஸில், ஒரு மணி நேரத்தில் 40 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், 9000 மின்னல் தாக்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. Pas-de-Calais இல் சில நிமிடங்களில் 50 மி.மீ. மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மண் சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.
20 வருடங்களின் பின்னர் இந்த மே மாதம் பிரான்ஸில் 200,000 மின்னல் தாக்கங்கள் பதிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் புயல் எதிர்வரும் ஞாயிறு மற்றும் அடுத்த வாரம் முழுவதும் எதிர்பார்க்கப்படுகிறது.
**Most Related Tamil News**
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!