(chinese companies testing civilian drones carry tonne cargo)
பிட்சா உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளில் டெலிவரி செய்ய “ட்ரோன்” எனப்படும் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் சீனாவில் நடைமுறைக்கு வந்துள்ளது.
Ele.me என்ற நிறுவனம் இதனை சோதனை முறையில் தொடங்கியுள்ளது. ஷாங்காய் மாகாணத்தில் உள்ள ஜின்ஷனா் தொழில் பூங்கா குடியிருப்பு பகுதிகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு செலவாகும் அளவுக்கு எரிபொருள் இதற்குத் தேவையில்லை என்பதோடு பொதுமக்களிடம் இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, பிற மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
வருங்காலத்தில் 70% டோர் டெலவரிக்கு இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
OUR GROUP SITES
chinese companies testing civilian drones carry tonne cargo