இரு 11 வயது சிறுமிகள் சம்பந்தப்பட்ட பாலியல் சமீபத்திய வழக்குகளை அடுத்து புதனன்று பிரஞ்சு பாராளுமன்றம், சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்களுக்கு கடுமையான தண்டனைகளை கொண்ட புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. France severe punishment sexual violence against children
ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் தேர்தல் பிரச்சாரத்தில் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேசிய சட்டமன்றத்தில் சிறுவர்கள் மேல் மேற்கொள்ளப்படும் கற்பழிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்குகள் கிடைத்தன.
இரண்டு ஆண்கள் சிறுமிகளை கற்பழித்த வழக்குகளிலிருந்து விடுதலையாகியதால் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை தொடர்ந்தே இந்த மாற்றங்கள் வந்துள்ளன.
15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மேல், வயது வந்தவர்களால் மேற்கொள்ளப்படும் பாலியல் செய்கைகள் தற்போதைய பிரஞ்சு சட்டத்தின் கீழ் ஒரு பாலியல் குற்றமாகும்.
ஆனால் விருப்பத்துடன் மேற்கொள்ளப்படும் பாலியல் செய்கையோ அல்லது கட்டாயப்படுத்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டதோ என சட்டதரணிகள் நிரூபிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் டீனேஜ் பிள்ளைகள் ஈடுபடும் போது மிகவும் சிக்கலான வழக்காக இருக்கலாம்.
மேலும் இது போன்ற வழக்குகளுக்கு 10 வருடத்திற்கும் அதிகமாக அதாவது 15, 20 வருடங்கள் சிறைத்தண்டனை கூட வழங்கப்படலாம்.
tags:- France severe punishment sexual violence against children
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பிரான்ஸில் விலையேற்றம் காணும் மின்சாரம், எரிவாயு!
- பிரான்ஸிலுள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- நான் தான் இப்போ கேப்டன் நான் சொல்றத கேளுங்க : பாலாஜியிடம் கெத்து காட்டும் ஐஸ்