கார் ஒன்றில் அதிவேகமாக பயணித்த நபர் ஒருவரை காவல்துறையினர் மறித்தனர். குறித்த நபரின் தோழியின் தற்கொலை முயற்சியை தடுக்கவே வேகமாக சென்றதாக தெரிவித்துள்ளார். France arrested person drive car fast
மே 21 இல் Côtes d’Armor நகரில், பிற்பகல் 1 மணி அளவில், குறித்த நபர் காரில் உச்ச வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் போது, அப்பகுதியைச் சேர்ந்த காவல்துறையினரால் மறிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் விசாரணையின் போது, தனது தோழி தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும், அவரை காப்பாற்றவே வேகமாக சென்றதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனால் உடனடியாக Callac நகரில் உள்ள குறித்த தோழியின் வீட்டுக்கு காவல்துறையினர் சென்றுள்ளனர்.
அங்கு அப்பெண் தற்கொலை செய்யும் நோக்கில், கழுத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும் போது, காவல்துறையினர் கதவினை உடைத்துச் சென்று காப்பாற்றினர். அதன் பின்னர் அப்பெண்ணும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் பல விடயங்கள் மறைக்கப்படுகிறது – முன்னாள் நீதிபதி குற்றச்சாட்டு!
- எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட இரண்டாவது இலங்கையர் ; பல தடைகளைத் தாண்டி சாதனை
- வலிக்கிறது என கெஞ்சியும் கூட கதற கதற மகளை வன்புணர்ந்த தந்தை!