வாட்ஸ்ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம் ஜெட் ஏர்வேஸ் கோரிக்கை

0
724
Fake Alert ticket give jit airways 25th Anniversary Tamil news

Fake Alert ticket give jit airways 25th Anniversary Tamil news

ஜெட் ஏர்வேஸ் 2 இலவச டிக்கெட்டுகள் தருவதாக பரவும் வதந்தி

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது 25வது ஆண்டு கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் 2 இலவச டிக்கெட்டுகளை தருவதாக வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருவதுடன் இந்த செய்தியை இன்னும் 20 வாட்ஸப் பயனாளர்களுக்கு அனுப்புவதன் மூலம் உங்களுடைய அதிர்ஷ்டம் இன்னும் நெருங்கி வரும் என ஒரு செய்தி கடந்த வாரம் முதல் காட்டுத்தீ போல் பரப்பப்பட்டு வருவதை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

இது பொய் செய்தி என்றும், ஜெட் ஏர்வேஸின் உண்மையான சலுகை மற்றும் பரிசுத் திட்டங்கள் அனைத்தும் தங்களுடைய அதிகாரபூர்வ தளங்களிலேயே நீள வண்ண டிக் குறியீடுடன் மட்டுமே வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.

(Fake Alert ticket give jit airways 25th Anniversary Tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை