கனடாவில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 160பேர் உயிரிழப்பு

0
615

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 955பேர் பாதிக்கப்பட்டதோடு 160பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், ஏழு இலட்சத்து 31ஆயிரத்து 450பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18ஆயிரத்து 622பேர் உயிரிழந்துள்ளனர்.

67ஆயிரத்து 099பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 868பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆறு இலட்சத்து 45ஆயிரத்து 729பேர் வைரஸ் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.