வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்வனவு செய்யும் அரச சொத்துக்கள் தமது ஆட்சியில் பறிபோகும் – மஹிந்த இடித்துரைப்பு

0
436
Mahinda Rajapaksa appealed not purchase countrys government property

வெளிநாட்டு நிறுவனங்களே! நல்லாட்சி அரசாங்கம் விற்பனை செய்யும் நாட்டின் அரச சொத்துக்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.

அவ்வாறு கொள்வனவு செய்தால் எமது அரசாங்கம் வந்தவுடன் அதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சியினரால் அரசாங்கத்துக்கு எதிராக இன்று (02) முன்னெடுக்கப்பட்ட ஜனபல சேனா எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.

இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு உள்ள நிலத்தை இந்த அரசாங்கம் வெளிநாட்டுக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

விற்பனை செய்தும் உள்ளது. இவற்றை நாம் மீண்டும் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இதனை தேசத்தின் பெயரால் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(Mahinda Rajapaksa appealed not purchase countrys government property)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites