Saudi Arabia prohibits goods including fruits vegetables imported Kerala Niba virus
நிபா வைரஸ் அச்சம் காரணமாக கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.
கேரளாவில் பரவிய நிபா வைரஸ் பாதிப்பால் இதுவரை 16 பேர் பலியானதுடன் சுமார் 2 ஆயிரம் பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை தடை செய்வதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஐக்கி அரபு அமீரகமும் இதே போன்று கேரள பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.