பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள “காலா” படத்தை தேவகௌடா காப்பாற்றுவார் என நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.(Kaala release Karnataka confirm Rajini Talk)
அதாவது, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ளா “காலா” படம் நாளை மறுதினம் உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது.
ஆனால், காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் காலா படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.
இந்நிலையில், காலா பட தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்பிற்காக படக்குழு ஹைதராபாத் சென்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய ரஜினி, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது.. :-
”காலா படத்திற்கு இதைவிட அதிக எதிர்ப்பை எதிர்பார்த்தேன். ஆனால், இது குறைவு தான். அரசியல் வேறு, சினிமா தொழில் வேறு.
ஆனால் இரண்டையும் சேர்த்துப் பார்க்கிறார்கள். ஒரு படத்தில் நல்ல விஷயம் இருந்தால் நிச்சயம் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இல்லையென்றால் விட்டு விடுவார்கள்.
காவிரி விவகாரத்தில் பேசித் தீர்வு கண்டால் நல்லது. கர்நாடக முதல்வரை கமல் சந்தித்ததில் தவறில்லை.
காலா படம் வெளியீடு குறித்து கர்நாடக அரசு ஏற்பாடு செய்யும் என நம்புகிறேன். படத்தை தடை செய்ய தேவகௌடா விட மாட்டார்”
இவ்வாறு அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
<MOST RELATED CINEMA NEWS>>
* நான் இவரையும் தான் காதலித்தேன் : உண்மையை போட்டுடைத்த சமந்தா..!
* ப்ளீடிங் ஸ்டீல் : திரை விமர்சனம்..!
* பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
* விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!
* இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!
* இணையத்தை தெறிக்கவிடும் விஜய்யின் நியூ கெட்டப்..! (படம் உள்ளே)
* ‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!
* நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!
* இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!
Tags :-Kaala release Karnataka confirm Rajini Talk
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-