(UAE announce new T20 league news Tamil)
ஐக்கிய அரபு இராச்சியம் புதிய இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், குறித்த லீக் தொடருக்கான பெயரை விரைவில் வெளியிடும் என அறிவித்துள்ளது.
சர்வதேச நாடுகள் இருபதுக்கு-20 கிரிக்கெட் லீக் தொடர்களை ஏற்பாடு செய்து வருகின்றன. இந்த லீக் போட்டிகளில் சர்வதேச வீரர்களை ஏலத்தில் எடுத்து போட்டிகளை நடத்தி வருகின்றன.
இதன்படி ஐக்கிய அரபு இராச்சியம் தங்களுக்கு என ஒரு தொடரை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த போட்டித் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி, டுபாய், சார்ஜா, அஜ்மன் மற்றும் ரஷ் அல் கஹ்மா ஆகிய நகரங்களை உள்ளடக்கிய ஐந்து அணிகள் போட்டியிடவுள்ளன.
போட்டித் தொடரின் 16 பேர் கொண்ட ஒரு அணிக்குழாமில், 6 வெளிநாட்டு வீரர்கள், 3 ஐக்கிய அரபு இராச்சிய வீரர்கள், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2 வளர்ந்து வரும் வீரர்கள், ஐசிசியின் அஷோசியேசன் அணிகளிலிருந்து 2 வீரர்கள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் 3 ஜுனியர் வீரர்களும் இணைக்கப்படுவர்.
இதேவேளை தொடருக்கான வெளிநாட்டு வீரர்களை அனுப்புவதற்கு நியூஸிலாந்து, மே.தீவுகள், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் சிம்பாப்வே அணிகள் சம்மதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 போட்டிகள் கொண்ட இந்த போட்டித் தொடர் எதிர்வரும் டிசம்பர்- ஜனவரி மாதங்களில் 24 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தனஞ்சயவின் சுழலில் சிக்கிய மே.தீவுகள் பதினொருவர் அணி!
- துடுப்பாட்ட வரிசைக்கு பலம் சேர்த்திருக்கும் குசல் பெரேரா! : நிறைவுக்கு வந்தது பயிற்சிப்போட்டி!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>