பிரபல இந்திய பாடகரை பஞ்சாபிலிருந்து வந்த ஒரு நபர் என விமர்சித்த ட்ரூடோவுக்கு கண்டனம்

0
36

பிரபல இந்திய பாடகர் குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த ஒரு கருத்து இணையத்தில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, ரொரன்றோவிலுள்ள Rogers Centreஇல் நடைபெற்ற பிரபல இந்திய பாடகரான Diljit Dosanjhஇன் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு சர்ப்ரைஸாக வருகைதந்தார். அவரை பாராட்டவும் செய்தார் ட்ரூடோ.

ஆனால், அதற்குப் பின் Diljit Dosanjhஐக் குறித்து சமூக ஊடகமான எக்ஸில் அவர் வெளியிட்ட ஒரு செய்தி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

கனடா ஒரு மாபெரும் நாடு பஞ்சாபிலிருந்து வந்த ஒரு நபர் (a guy from Punjab), நம் நாட்டிற்கு வந்து வரலாறு படைக்கமுடியும், பலதரப்பட்ட மக்கள் நம் நாட்டில் வாழ்வது நம் பலம் மட்டுமல்ல, அது ஒரு சூப்பர் பவர் என்று குறிப்பிட்டிருந்தார் ட்ரூடோ.

ஆனால், ட்ரூடோ ஏன் பஞ்சாபிலிருந்து வந்த ஒரு நபர் (a guy from Punjab) என்று கூறினார்? அவர் இந்தியாவிலிருந்து வந்த ஒரு நபர் என்று கூறியிருக்கலாமே என்னும் தோரணையில் சமூக ஊடகங்களில் இந்திய அரசியல்வாதிகள் முதல் பலரும் கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.