T20 World Cup – மழை குறுக்கீடு: டக்வோர்த் லூயிஸ் முறைப்படி அவுஸ்திரேலியா வெற்றி

0
93

பங்களாதேஷ் அணிக்கு எதிரான சூப்பர் 8 பேட்டியில் அவுஸ்திரேலியா அணி டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

141 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 11.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

எனினும் மழை குறுக்கிட்டமையால் போட்டி கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அவுஸ்திரேலியா அணி டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் ஆட்டநாயகனாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பட் கம்மின்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

அவுஸ்திரேலியாவுக்கு 141 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

நடப்பு T20 உலகக் கிண்ண தொடரின் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் விளையாடும் அவுஸ்திரேலியா அணி பங்களாதேஷை 140 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் சூப்பர் 8 சுற்றின் நான்காவது போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறுகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவெடுத்திருந்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களை குவித்திருந்தது.

அந்த அணி சார்பில் அணித் தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 41 ஓட்டங்களையும், தவ்ஹித் ஹ்ரிடோய் 40 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்து வீச்சில் பட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மற்றும் அடம் சம்பா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

பட் கம்மின்ஸின் மூன்று விக்கெட்டுகளும் ஹாட்ரிக் விக்கெட் ஆகும். T20 வரலாற்றில் பட் கம்மின்ஸ் பெற்றுக்கொண்ட முதல் ஹாட்ரிக் விக்கெட் இதுவாகும்.

இதன்மூலம் T20 உலகக் கிண்ணப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 7வது வீரராக மாறிய கம்மின்ஸ் பிரட் லீக்குப் பிறகு ஹாட்ரிக் விக்கெட் எடுத்த அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், 141 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணி தயாராகியுள்ளது.

மேலதிக செய்திகள்

T20 World Cup – பில் சால்ட் அதிரடி துடு