பிரித்தானிய பேருந்துகளில் அனுரவின் புகைப்படம்: பிரித்தானிய வாழ் இலங்கையர்களால் ஏற்பாடு

0
61

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பிரித்தானியாவிலுள்ள இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுவதற்காக பல பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அவரின் பிரித்தானிய விஜயத்தை முன்னிட்டு, இலங்கையர்கள் பேருந்துக்கு வர்ணம் பூசி அவரது புகைப்படங்களை ஒட்டியுள்ளனர். அநுரகுமார திஸநாயக்க அண்மையில் கனடா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.