இந்திய தேர்தல் முடிவுகள்: ஜெகன் ரெட்டி பதவி விலகுகிறார்

0
88

இந்திய லோக் சபா தேர்தல் (நாடாளுமன்றம்) இடம்பெற்று முடிந்துள்ள நிலையில் இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் கீழ் சபைக்கு தலா ஒரு பிரதிநிதியை அனுப்புவதற்காக 543 மக்களவைத் தொகுதிகளில் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

எந்த கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. 1951-52ல் நடந்த இந்தியாவின் முதல் தேர்தலுக்குப் பிறகு இந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் இரண்டாவது மிக நீளமானது.

வாக்குகள் எண்ணப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் வெற்றி தோல்வி நிலைமைகள் மெதுவாக வெளிப்படும் என்பதுடன் பிற்பகலில் முடிவுகள் முழுமையாக வெளிவரும் என இந்திய ஊடகங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

தபால் மூல வாக்கு எண்ணிக்கை முடிந்த 30 நிமிடங்களுக்குப் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெகன் ரெட்டி பதவி விலகுகின்றார்

ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி மாலை 4 மணிக்கு தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு எதிர்வரும் ஒன்பதாம் திகதி பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

300 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை

தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 1பாஜக கூட்டணியானது 301 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் இந்தியா கூட்டணி 224 இடங்களில் முன்னிலைபெற்றுள்ளது.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முன்னிலை

நடந்து முடிந்த தேர்தலில் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, மேற்கு வங்கத்தில் 31 இடங்களில் முன்னிலை வகிக்கிறது திரிணாமுல் காங்கிரஸ். பாஜக 10 இடங்களில் முன்னிலை வகிப்பதாக தகவல்.

பாலியல் புகாரில் சிக்கிய பாஜக கூட்டணி வேட்பாளர் படுதோல்வி

கர்நாடக மாநிலம் ஹாசன் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதச்சாற்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை

சற்று முன்னர் வெளியாகியுள்ள முடிவுகளின்படி கேரளாவில் உள்ள மொத்தம் 20 தொகுதிகளில் காங்கிரஸ் 13 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாில் பாஜக முன்னிலை

தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி, பீகாில் உள்ள 42 தொகுதிகளில் பாஜக கூட்டணி 33 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 05 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

விருதுநகரில் விஜயகாந்த் மகன் முன்னிலை

விருதுநகர் மக்களவைத் தொகுதியில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். விஜய பிரபாகரன் 120377 வாக்குகள் பெற்று 6162 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

டெல்லியில் அனைத்து இடங்களிலும் பாஜக முன்னிலை

தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை

28 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில், பாஜக 16 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் நோட்டோ

மத்தியப்பிரதேசம் இந்தூர் தொகுதியில், 1,38,263 வாக்குகளை நோட்டா பெற்று 2வது இடத்தில் உள்ளது. கடைசி நேரத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர் , பாஜக கூட்டணிக்கு மாறியதால், நோட்டாவுக்கு வாக்கு சேகரித்தது இந்தியா கூட்டணி.

பாஜக கூட்டணி முன்னிலை

தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி பாஜக கூட்டணி 290 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 22 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி 71,000 வாக்குகளால் முன்னிலை

தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி வாரணாசியில் பிரதமர் மோடி 2,20,316 வாக்குகள் பெற்று 71,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

கோயம்பத்தூரில் பாஜக தலைவர் அண்ணாமலை பின்னடைவு

கோயம்பத்தூரில் பாஜக தலைவர் அண்ணாமலை கடும் பின்னடைவை சந்தித்துள்ளார். அதன்படி, கோயம்பத்தூரில் திமுக கணபதி ராஜ்குமார் முன்னிலையில் உள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் 33997 வாக்குகளைப் பெற்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர் முன்னிலையில் உள்ள நிலையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 26741 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார்.

10 ஆண்டுகளின் பின் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு

காங்கிரஸ் கட்சி தற்போது நூற்றுக்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி இவ்வாறு வெற்றி பெறும் சூழல் காணப்படுகிறது.

அதன்படி, தற்போது வரையில் காங்கிரஸ் கூட்டணி 222 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. கடந்த இரு தேர்தல்களைப் போல அல்லாமல் இம்முறை பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை

நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி 36 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக பின்னடைவு

காலை 9.40 மணி நிலவரப்படி உத்தரபிரதேச மாநிலத்தில் இந்திய கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதேபோல, ஹரியானா, ராஜஸ்தான் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை

உத்தரபிரதேச மாநிலத்தில் 9.30 மணி நிலவரப்படி அங்குள்ள 80 மக்களவை தொகுதிகளில் இந்தியா கூட்டணி 36 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது.

மோடி பின்னடவு

லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிட்ட, பிரதமர் மோடி 5000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கடும் போட்டி

மகாராஷ்டிராவில் பாஜக தலைமயிலான கூட்டணி 26 இடங்களிலும், எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்திய கூட்டணி 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

உத்தரபிரதேசத்தில் பாஜக ஆதிக்கம்

80 மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பாஜக கூட்டணி 41 இடங்களிலும், இந்தியா கூட்டணி 19 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

மேற்குவங்கத்திலும் பாஜக ஆதிக்கம்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பாஜக-17

காங்கிரஸ்-2

டிஎம்சி- 9

மற்றவை – 1

டெல்லியில் பாஜக ஆதிக்கம்

தலைநகர் டெல்லியில் உள்ள ஏழு மக்களவை தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக தலைமையிலான கூட்டணி முன்னிலை

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான கூட்டணி தற்போதைய சூழலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

பாஜக முன்னிலை

தபால் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளின்படி பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 253 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணி 134 இடங்களில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக முன்னிலை

மக்களவை தேர்தல் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 18 இடங்களில் திமுக முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முடிவு அறிவிக்கப்பட்டது

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் முதல் முடிவை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதுள்ளது. இதன்படி குஜராத் மாநிலம் சூரத்தில் பாஜக வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.