நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

0
52

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசாக தோரணைகள், தானசாலைகள் உள்ளிட்ட சர்வமத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைமா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதற்காக 18,000இற்கும் அதிகமான காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடு முழுவதும் 419 வெசாக் வலயங்களும் 321 விசாக தோரணைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் 3,000இற்கும் அதிகமான தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அவற்றின் சுகாதாரத் தரம் தொடர்பில் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு ஹிரு தொலைக்காட்சி, ஹிரு எப்.எம் உள்ளிட்ட ஹிரு ஊடக வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புண்ணிய நிகழ்வு, வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை அலுவிகாரையில் இன்று இடம்பெறவுள்ளது.

மாத்தளை அலுவிகாரையில் உள்ள திரிபீடகத்தைப் பாதுகாக்கும் வகையில் ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோ சில்வாவின் எண்ணக்கருவிற்கு அமைய, திரிபீடகப் பாதுகாப்பு நிலையம் நிர்மாணிக்கபடவுள்ளது.