2024 புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பம் கோரல்

0
53

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.