சிற்றுண்டிச்சாலைக்குள் பொலிஸ் அதிகாரியால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

0
37
File image

பிங்கிரிய சிற்றுண்டிச்சாலைக்குள் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிங்கிரிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த உணவகத்தை இந்த அதிகாரியே நடத்தி வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

பிங்கிரிய பொலிஸ் பணிக்காக வந்த 50 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸ் கான்ஸ்டபிள் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

துஷ்பிரயோகம்

இது தொடர்பில் குறித்த பெண் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் அவரை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார்.