சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியை காணவில்லை!  

0
43

சாவகச்சேரி கச்சாயில் பாடசாலைக்குச் சென்ற 15 வயது மாணவி ஒருவர் வீடு திரும்பவில்லை என நேற்று சனிக்கிழமை (27) சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை சாவகச்சேரியில் அமைந்துள்ள பாடசாலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற மாணவி இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியைச் சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளார். 

மாணவி காணாமல் போனமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்