உடைந்து விழுந்த பாரீஸ் மவுலின் ரூஜ் காற்றாலை விசிறிகள்: சேதம் ஏற்படும் அபாயம் இல்லை என்கிறது தீயணைப்பு படை

0
76

பாரீஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற மவுலின் ரூஜ் (Moulin Rouge) கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த காற்றாலை விசிறிகள் இன்று (25) உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 2 முதல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விசிறிகள் உடைந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இந்த விபத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சேதம் ஏற்படும் அபாயம் இல்லை எனவும் பாரீஸ் நகர தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.