மாபெரும் வெற்றி கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்

0
38

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே. 23 திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

ராஜகுமாரி பெரியசாமி இயக்கத்தில் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் தான் அமரன். இப்படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார் சிவா. மேலும் சாய் பல்லவி இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர். முருகதாஸுடன் முதல் முறையாக சிவகார்த்திகேயன்   இணைந்துள்ள திரைப்படம் எஸ்.கே 23. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கன்னடத்தில் வெளிவந்த ஏழு கடல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ருக்மிணி தான் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து டான் எனும் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் சிபி சக்ரவத்தி.

இப்படத்திற்கு பின் இவர் ரஜினியை வைத்து இயக்க போகிறார் என கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இப்படியிருக்க மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கப்போகிறாராம் சிபி. அதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.