தோனி அதிரடியில் சென்னை அணி 176 ஓட்டங்கள் குவிப்பு!

0
55

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 177 என்ற வெற்றி இலக்கை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சென்னை அணி சார்பில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில், எம்.எஸ் தோனி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 9 பந்துகளில் 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் க்ருணால் பாண்டியா அதிகபட்சமாக 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.